Sunday, January 30, 2011

தமிழ் நாள்காட்டி 2042



”நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு”
என்றார் புரட்சிக் கவிஞர்.

அறிவுக்குப் பொருந்தாத, ஆபாசக் கதைகளைச் சொல்லி உங்கள் ஆண்டுக் கணக்கு இது தான் என்று, அறுபது ஆண்டுகளை நம் தலையில் கட்டிவிட்டது ஆரியம். இந்த பண்பாட்டுப் படையெடுப்பைக் கண்ட தமிழறிஞர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடி விவாதித்தனர்.

திருவள்ளுவர் பிறப்பு கி.மு.31 எனக் கொண்டு தமிழ் ஆண்டைக் கணக்கிடவும், தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தனர். கி.பி 1971-ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டு என்பதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டாலும், தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை 1-ஆகவே கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில் எண்ணற்ற தமிழ் உணர்வாளர்கள், பாரதிதாசன் தமிழ்ப் பேரவை போன்ற எண்ணற்ற தமிழ் அமைப்புகளின் முயற்சியின் பயனாக முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி 9.4.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 70-ன் மூலம் ’பிரபவ’ முதல் ’அட்சய’ வரையிலான ஆண்டுக் கணக்கைப் பயன்படுத்தக் கூடாது என அறிவித்தது.



இந்தப் பண்பாட்டுப் புரட்சியின் வெற்றியை கடந்த இரண்டு ஆண்டுகளாக “தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று அத்தனை தமிழர்கள் வாயிலிருந்தும் கேட்கும்போது அடடா அந்த மகிழ்ச்சியில் கண்ணீர் நம்மை நனைத்துவிடுகிறது. ஒரு சில பேர்களாக இருந்து தை முதல் நாளுக்குக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த நிலை மாறி, இன்று அனைவரும், பொங்கலோ பொங்கல் என்ற வாழ்த்தொலியோடு, தமிழ்ப் புத்தாண்டு குறித்தும் பேசும் போது அந்த நெகிழ்ச்சியை, மகிழ்ச்சியை, புரட்சியை சாத்தியமாக்கிய கலைஞரை தமிழினம் என்றைக்கும் மறக்காது .

அப்படி, தமிழ்ப் புத்தாண்டினை நினைவூட்டவும், மீளமைக்கவும், பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் தொடர்ந்து பாடுபட்டவர்கள் பலர். அதில் எனக்குத் தெரிந்து தொடர்ந்து தமிழ் நாள்காட்டிகளை உருவாக்கி, தான் காண்பவர்களுக்கெல்லாம் அதை இலவசமாகத் தந்து பரப்பிவருபவர் கல்பாக்கம் வேம்பையன் என்ற ஐவர் வழி வேம்பையன் அவர்கள். தமிழகம் முழுக்க இருக்கும் தமிழ்ப் பற்றாளர்கள் கைகளில் எப்படியாவது சென்று சேர்ந்திருக்கும். இவ்வாண்டு இப்பணியில் தமிழ் உணர்வாளர், செங்கை மாவட்ட தி.க செயலாளர் துரை முத்து அவர்களும் உறுதுணை புரிந்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.



உங்கள் தளத்தில் இணைத்துக் கொள்ள:


தானாய் சுழல்வது(Auto Play)
<embed type="application/x-shockwave-flash" src="http://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf" width="208" height="192" flashvars="host=picasaweb.google.com&hl=en_US&feat=flashalbum&RGB=0x000000&feed=http%3A%2F%2Fpicasaweb.google.com%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2Fprincenrsama%2Falbumid%2F5567961215529848561%3Falt%3Drss%26kind%3Dphoto%26hl%3Den_US" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"></embed>

தானாய் சுழலாதது (with out auto play)
<embed type="application/x-shockwave-flash" src="http://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf" width="208" height="192" flashvars="host=picasaweb.google.com&noautoplay=1&hl=en_US&feat=flashalbum&RGB=0x000000&feed=http%3A%2F%2Fpicasaweb.google.com%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2Fprincenrsama%2Falbumid%2F5567961215529848561%3Falt%3Drss%26kind%3Dphoto%26hl%3Den_US" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"></embed>

இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் தேவைக்கேற்ப இணையதளத்திலும், வலைப்பூக்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருக்கும் அளவை மாற்றிக் கொள்வதன் மூலம் பெரிதாகவோ, சிறிதாகவோ அமைத்துக் கொள்ளலாம்.

இன்னும் எளிமையாய் வலைப்பூக்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக கீழ்க்காணும் வடிவத்தில் “இணைத்துக்கொள்” சுட்டி வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ் நாள்காட்டி 2042
இதனைச் சொடுக்குவதன் மூலம் விட்ஜெட்டாக உங்கள் வலைப்பூவில் இணைத்துக் கொள்ளலாம். பிறகு உங்கள் தளத்திலிருந்தே நேரடியாக நாள்காட்டிக்கு செல்லமுடியும். இந்த வாய்ப்பு இனி எப்போதும் எம் தளத்தில் பார்வையில் படும்படி வலது பட்டை மேற்புறத்தில் இருக்கும். ஒவ்வொரு மாதமும் அந்த மாதம் முதலில் வரும்படி இவ்விணைப்பு செயல்படும்.தமிழ் வலைப்பதிவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இதனை மேம்படுத்தி, தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் பயன்படும் வண்ணம் நிரலியை உருவாக்கித் தர நமது மென்பொருள் வல்லுநர்கள் முன்வரவேண்டும். ஏற்கெனவே எவரும் செய்திருந்தாலும் அதனையும் நாம் பரப்ப வேண்டும். இதற்கென tamilnaalkaatti.blogspot.com என்ற தனி வலைப்பூ தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் நாள்காட்டி
பண்பாட்டை மீட்பதில் நம் பங்கை ஆற்றுவோம்.

காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப்பேரவை

காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் இனிய வணக்கங்கள்